முரட்டு ஜீன்ஸ் ஆடையின் முழு கதை
இன்றைய இளைஞர்களின் அடையாளம் ஜீன்ஸ். ஆனால், அது உண்மையில் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்தால் ஆச்சர்யம்தான் ஏற்படும். ஜீன்ஸ் உருவாகி வந்த பாதை கரடு முரடானது. இதை உருவாக்கியவர்கள் ஜேக்கப் டேவிஸ் மற்றும் லிவைஸ் ஸ்ட்ராஸ்.
ஜெர்மனி நாட்டின் பவேரியாவைச் சேர்ந்தவர் லிவைஸ் ஸ்ட்ராஸ். இவர் ஒரு துணி வியாபாரி. தனது அண்ணனுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்தவற்காக, 1853ல், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். பின்னர், சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் தங்கத்தை தேடும் பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாக லிவைசுக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடம் துணி விற்கலாமே என்று முடிவெடுத்து, அங்கு சென்றார் லிவைஸ். இவருடைய வாடிக்கையாளர்களுள் ஒருவர், ஜேக்கப் என்பவர் தையல் தொழில் செய்து வந்தார்.
சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப்பிடம், தங்கள் ஆடை அடிக்கடி கிழிவதைப் பற்றி முறையிட்டனர். கடின வேலையிலும் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரு ஆடையை உருவாக்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், லிவைசின் கைவசம் இருந்த கூடாரம் அமைக்க பயன்படும் டெனிம் எனப்படுகிற டுங்காரீ துணியை பயன்படுத்தி, ஆடை தைக்கலாம் என்று ஜேக்கப் டேவிசுக்கு தோன்றியது. கடினமான அந்த முரட்டு துணியை பொறுமையுடனும் சுரங்கத் தொழிலாளர்களின் வசதிக்கேற்பவும் தைத்தார் ஜேக்கப். கூடவே, அவர் வைத்திருந்த பித்தளை நட்டுகளையும் அதில் இணைத்து பேன்ட்டை இடுப்பில் பிடிமானமுள்ளதாக மாற்றினார். இப்படித்தான், 1873ல் லிவைஸ் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது நண்பர் ஜேக்கப் கைவண்ணத்தில் ஜீன்ஸ் உருவானது.
ஜீன்ஸ் ஆடைக்கு சுரங்கத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஜீன்ஸ் பேன்ட்டி
ன் தேவை பெருகவே, ஜேக்கப்புடன் கூட்டு வைத்து புதிய கம்பெனியை லிவைஸ் ஸ்ட்ராஸ் தொடங்கினார். இருவரும் ஜீன்சுக்கான காப்புரிமையையும் பெற்றனர். அதற்கடுத்து இத்தாலியின் ஜெனோவா நகரில் இருந்து தடிமனமான நீல வண்ண துணியினை வாங்கி அதில் நீல ஜீன்ஸ் தைத்தனர். நாளடைவில் அது பிரபலமாகி இன்று எல்லோராலும் விரும்பி அணியப்படுகிற ஜீன்ஸ் ஆனது. ஜெனோவா நகர துணி என்பதை குறிக்க ஜென்னாஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அதுவே ஜீன்ஸ் என்றும் ஆனது.
ஆரம்பத்தில், ஜீன்ஸ் என்பது முரட்டு தொழிலாளர்களால் அணியப்படும் மோசமான ஆடையாகவே கருதப்பட்டு வந்தது. எனினும், 1950களில், புரட்சி அல்லது கலகத்தின் அடையாளமாக கூறி இளைஞர்கள் அதை அணிய ஆரம்பித்தனர். அதற்கு எதிர்வினையாக, பள்ளிக்கூடங்கள், உணவு விடுதிகள் போன்ற பொதுஇடங்களில் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டது. எனினும், அது வெகுநாள் நீடிக்கவில்லை. மிக விரைவிலேயே, அமெரிக்க இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக மாறி உலகம் முழுவதும் பரவியது. இன்று இளைஞர்கள் மட்டுமின்றி முதியர்களும், சிறுவர்களும், பெண்களும் கூட ஜீன்ஸ் அணிகின்றனர்.
மு.கோபி
ஜெர்மனி நாட்டின் பவேரியாவைச் சேர்ந்தவர் லிவைஸ் ஸ்ட்ராஸ். இவர் ஒரு துணி வியாபாரி. தனது அண்ணனுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்தவற்காக, 1853ல், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். பின்னர், சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் தங்கத்தை தேடும் பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாக லிவைசுக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடம் துணி விற்கலாமே என்று முடிவெடுத்து, அங்கு சென்றார் லிவைஸ். இவருடைய வாடிக்கையாளர்களுள் ஒருவர், ஜேக்கப் என்பவர் தையல் தொழில் செய்து வந்தார்.
சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப்பிடம், தங்கள் ஆடை அடிக்கடி கிழிவதைப் பற்றி முறையிட்டனர். கடின வேலையிலும் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரு ஆடையை உருவாக்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், லிவைசின் கைவசம் இருந்த கூடாரம் அமைக்க பயன்படும் டெனிம் எனப்படுகிற டுங்காரீ துணியை பயன்படுத்தி, ஆடை தைக்கலாம் என்று ஜேக்கப் டேவிசுக்கு தோன்றியது. கடினமான அந்த முரட்டு துணியை பொறுமையுடனும் சுரங்கத் தொழிலாளர்களின் வசதிக்கேற்பவும் தைத்தார் ஜேக்கப். கூடவே, அவர் வைத்திருந்த பித்தளை நட்டுகளையும் அதில் இணைத்து பேன்ட்டை இடுப்பில் பிடிமானமுள்ளதாக மாற்றினார். இப்படித்தான், 1873ல் லிவைஸ் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது நண்பர் ஜேக்கப் கைவண்ணத்தில் ஜீன்ஸ் உருவானது.
ஜீன்ஸ் ஆடைக்கு சுரங்கத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஜீன்ஸ் பேன்ட்டி
ஆரம்பத்தில், ஜீன்ஸ் என்பது முரட்டு தொழிலாளர்களால் அணியப்படும் மோசமான ஆடையாகவே கருதப்பட்டு வந்தது. எனினும், 1950களில், புரட்சி அல்லது கலகத்தின் அடையாளமாக கூறி இளைஞர்கள் அதை அணிய ஆரம்பித்தனர். அதற்கு எதிர்வினையாக, பள்ளிக்கூடங்கள், உணவு விடுதிகள் போன்ற பொதுஇடங்களில் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டது. எனினும், அது வெகுநாள் நீடிக்கவில்லை. மிக விரைவிலேயே, அமெரிக்க இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக மாறி உலகம் முழுவதும் பரவியது. இன்று இளைஞர்கள் மட்டுமின்றி முதியர்களும், சிறுவர்களும், பெண்களும் கூட ஜீன்ஸ் அணிகின்றனர்.
மு.கோபி
Comments
Post a Comment